பிரபல நடிகை ஜெயலட்சுமியின் படத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பி விபச்சாரத்துக்கு அழைப்பு விடுத்த விவகாரத்தில்  பல இளைஞர்களுக்கு ஆசை வார்த்தை கூறி பேரம் பேசி 40 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் முருகப் பெருமான், கவியரசன் என்ற இரண்டு பேர் வாட்ஸ்அப்பில் ரிலேசன்ஷிப் டேட்டிங் சர்வீஸ் என்ற பெயரில் நட்பு வட்டாரத்தை ஏற்படுத்திக் கொண்டு, அழகான பெண்கள், துணை நடிகைகள் மற்றும் பிரபல நடிகைகளின் போட்டோக்களை பல இளைஞர்களுக்கு அனுப்பி விபச்சாரத்துக்கு அழைத்துள்ளனர்.

இந்நிலையில் பிரபல தமிழ் நடிகை ஜெயலட்சுமியின் படத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பி அவருடன் உல்லாசமாக இருக்கலாம் என முருகப் பெருமானும், கவியரசனும்  வலை விரித்தனர்.  ஆனால் இது குறித்து நடிகை ஜெயலட்சுமி அளித்த புகாரையடுத்து  அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து  விபச்சார புரோக்கர்களாக செயல்பட்ட முருகபெருமான், கவியரசன் ஆகியோரது செல்போன்களை ஆய்வு செய்த போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.  அதில் பல  பிரபல நடிகைகளின் போட்டோக்களும் அவர்களுக்கு என்ன விலை? என்பதும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தவிர அழகான பெண்களின் புகைப்படங்களும் செல்போனில் பதிவு செய்யப்பட்டு, அவர்களின் ரேட்டும் வெளியிடப்பட்டிருந்தது.

மேலும் தமிழில் மிகப் பிரபலமான நடிகை ஒருவரின் போட்டோவை போட்டு அந்த நடிகையுடள் உல்லாசமாக இருக்க வேண்டும் என்றால் 40 லட்சம் ரூபாய் வேண்டும் என்று வாட்ஸ்அப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த்து.

அந்த வாட்ஸ்அப் பதிவுக்கு  எதிர் முனையில் இருந்து பதில் அளித்த கஸ்டமர் ஒருவர்  இது ரொம்ப அதிகம். ரூ.1 லட்சம் வேண்டுமானால் தரலாம் என்று கூறியுள்ளார்.

இது போன்று மேலும்  70 பெண்களின் கவர்ச்சி போட்டோக்களையும் அனுப்பி வைத்துள்ளனர். அதில் இந்த பெண் பிடித்திருந்தால் பதில் சொல்லுங்கள் என்று மெசேஜ் அனுப்பி ஒவ்வொருவருக்கும் ஒரு ‘ரேட்’டை வைத்துள்ளனர். இப்படி  பல வாடிக்கையாளர்களிடம் தவறான படத்தைக் காண்பித்து 40 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது

இந்த வாட்ஸ்-அப் உரையாடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் நடிகை ஜெயலட்சுமிக்கு அனுப்பியது போல பல பெண்களுக்கும் லட்சங்களில் இந்த இரு விபசார புரோக்கர்களும்  பேரம் பேசியுள்ளனர். அதில் அரசியல் பிரமுகர்கள் பலர் உங்களோடு இருக்க ஆசைப்படுகிறார்கள். நீங்கள் மனசு வைத்தால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்றும் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளனர். இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.