இராயக்கோட்டை,

கிருஷ்ணகிரியில், தாய் இறந்தபிறகு ஏற்பட்ட சொத்துத் தகராறில், பிள்ளைகள் மூவரும் தாயின் உடலை அடக்கம் செய்யாமல் வைத்திருக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை அருகே உள்ள கொப்பகரைக் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னம்மாள் (80). இவருக்கு மாரியப்பன், சுப்பிரமணி, முருகேசன் என்ற மூன்று மகன்களும், துரோபதை என்ற ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சின்னம்மாள் நேற்று முன்தினம் இறந்தார்.

சின்னம்மாள் உயிரோடு இருக்கும் வரை ஒற்றுமைக் காத்த சகோதரர்கள், அவர் இறந்தவுடம் சச்சரவில் ஈடுபட்டனர்.

அவரின் சொத்துகளை பங்கிடுவதில் ஏற்பட்ட குழப்பம் தகராறாக மாறியது.

இதனால் மூன்று பேரும் அவர்களின் தாயின் உடலை அடக்கம் செய்யவிடாமல் பெரும் தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த இராயக்கோட்டை காவலாளர்கள் அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், அவர்கள் மூவரும் சமாதானம் அடையவில்லை. தொடர்ந்த் சொத்துத் தகராறால், தாயை அடக்கம் செய்யாமல் வைத்துள்ளனர்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், சொத்துக்காக இப்படி பன்றீங்களேம்மா-னு வருத்தப்பட்டனர்.