Asianet News TamilAsianet News Tamil

“என்னையவே நிறைய பேர் டெஸ்ட் பண்ணிருக்காங்க”- மாணவிகளிடம் காம நெடி வீச பேசிய பேராசிரியை...பின்னணியில் இருப்பது யார்?

Prof luring to compromise on morality Academic world in shock over incident
Prof luring to compromise on morality; Academic world in shock over incident
Author
First Published Apr 16, 2018, 10:07 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp


பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள் மாணவிகளின் பாலியல் வன்கொடுமை செய்வதை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், கல்லூரி மாணவிகளை இப்படி கல்வித்துறையில் இருக்கும் காம வெறி பிடித்த மிருகங்களுக்கு விருந்தாக்க பேராசிரியையே புரோக்கராக மாறிய இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் பெற்றோர்களிடம் இருப்பதை விட கல்வி போதிக்கும் ஆசிரியர்களுடனே அதிக நேரம் இருக்கின்றார்கள். கல்வியுடன் ஒழுக்கத்தை போதிக்கும் அவர்களால் மட்டுமே ஒரு சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும். அத்தகைய உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் பேராசிரியை நிர்மலா போன்றோர் தன் மகள் வயதில் இருக்கும் மாணவிகளிடம், இப்படி ஒரு கேவலமான ஆசை வார்த்தைக் கூறி பாலியல் தொழிலுக்கு வர வற்புறுத்துவது  பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் கீழ் தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியையாக இருப்பவர் நிர்மலா தேவி இவர் 15 ஆண்டுகளாக பேராசிரியையாக இருக்கிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு மாணவிக்கு பொன் செய்கிறார். அதில், நிர்மலா தேவி, “வீட்டுல பெரியவங்க யாரும் இருக்காங்களா? எனக் கேட்கிறார். இல்லை மேடம் என மாணவி பதில் அளிக்கிறார்.

இப்படி தொடரும் இந்த பொன் பேச்சு, “நா இப்ப பேசப்போறது ஹையர் அஃபிசியல் மேட்டர். ரொம்ப ரொம்ப சீக்ரெட்டா இருக்கனும். நமக்குள்ள இதுவரைக்கும் ஆசிரியர், மாணவி ரிலேஷன்ஷிப்ல இருந்திருக்கோம். இப்ப அடுத்த லெவல் போறதுக்கு உங்களுக்கு ஒரு பெரிய சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.

அகடமிக் சைடுல உங்களுக்கு நான் எந்த அளவுக்கு சப்போர்ட்டிவா இருந்திருக்கேன். இப்போ ஆபர்ச்சுனிட்டி வந்திருக்கு. போன ஸ்பீக்கர்ல போட்டிருக்கியா? ஸ்பீக்கர்ல போடு. நாலு பேரும் கேளுங்க. நீங்க 4 பேரும் சீக்ரெட்டா ஒண்ணு பண்ண வேண்டி இருக்கு.  நீங்க மட்டும் அப்படி பண்ணா போதும் பெரிய லெவலுக்கு வரலாம். யூனிவர்சிட்டியை பொறுத்தவரைக்கும் சில விஷயங்களை வெற்றிகரமாக முடிக்கிறதுக்குக் கல்லூரி மாணவிகள் கிட்டே ‘சில விஷயங்களுக்களை அதிகாரிகள் எதிர்பார்க்குறாங்க.

நானும்  இதுவரைக்கும் அந்த லெவலுக்கு  இறங்கினது இல்ல. ஆனால், சில விஷயங்களை அவங்க கொஞ்சம் எதிர்பார்க்கிறாங்க என பிரைன் வாஷ் பண்ண தொடங்குகிறார்.

கொஞ்சம் கேப் விட்டு, அவங்க ரொம்ப நாளா அவங்க கேட்டுக்கிட்டு இருக்காங்க. இதுக்கு முன்னாடி நானும் நாகராஜன் சாரும் பேப்பர் ரீவெல்யூயேசனுக்கு வந்தோம்ல அந்த சந்தர்ப்பத்திலிருந்து என்ன ரொம்ப கேட்டுட்டு இருக்காங்க என கொஞ்சம் மழுப்பினார்.

இந்த விஷயம் வெளியில் தெரிஞ்சிதுனா, கண்டிப்பா வந்து இதுல யார் யாரு இன்வால்வ் ஆகியிருக்காங்களோ அவங்களை பற்றி நெகட்டிவா வர்றதுக்கு சந்தர்ப்பம் இருக்கு. இன்னும் ஒன்றரை மாதம் தான். அப்புறம் பிராக்டிகல்ஸ் முடிஞ்சிரும். நான் இந்த ஸ்டெப்பை எடுக்க ஆரம்பிக்கிறேன். அதாவது நீ ‘அந்த மாதிரி’ நடந்துக்கிட்டா அகடமிக் ரீதியாவும், ஃபினான்சியலாவும் நல்ல சப்போர்ட் இருக்கும். நீங்க எதிர்பார்க்காத அளவுக்கு சப்போர்ட் இருக்கும் என புரோக்கராக மாறிய இந்த பேராசிரியை இன்னும் கொஞ்சம் பேசணும் என்று தொடர்கிறார்.

நீங்க இதை உங்க அப்பா, அம்மாவுக்கு சொல்லிட்டு செய்வீங்களா? சொல்லாமல் செய்வீங்களாங்கிறது எனக்கு தெரியாது. பிளான் பண்ணுங்க. புதுசா அக்கவுண்ட ஓபன் பண்ணிட்டா, அமவுண்டை அக்கவுண்ட்ல போட்டு விடுறேன். நீங்க 4 பேரோ, 5 பேரோ...சரியா? நான் உங்ககிட்ட அடுத்த வாரம் பேசுறேன். நீங்க இன்னும் கொஞ்சம் டீடெய்லா பேசுங்க” என புரோக்கர் தொழிலை பலவருடங்களாக செய்யும் ஒருவரால் கூட இப்படி பேசமுடியுமா என யோசிக்க தோன்றும் அளவிற்கு மனதை மாற்ற முயற்சிக்கிறார்.

கல்வி போதிக்கும் இந்த கபோதி காம வெறி பிடித்த மிருகங்களுக்கு ஏழை மாணவிகளின் சூழ்நிலையை தங்களின் சுயலாபத்துக்காகவும், காமலீலைக்கு தங்களை தள்ள முயற்சிப்பதை அறிந்த அந்த மாணவிகள் மேடம் இதுபற்றி இதுக்கு மேல பேசவேண்டாம் என மறுப்பு தெரிவிக்கின்றனர்.

பேராசிரியை வேண்டாம்னு சொல்லுறீங்களா? சரிடா கண்ணா. ஒரு வாய்ப்பு வந்தது. அதான் சொல்றேன். இதை வெளில சொல்லிக்க வேணாம். உங்க குடும்பத்துகுள்ளயே சொன்னா வித்தியாசமா தெரியும். இன்னைக்கு வியாழக்கிழமை நீங்க வெள்ளிக்கிழமை சனிக்கிழமை நல்லா யோசிச்சு ஞாயிற்றுக்கிழமை சொல்லுங்க. ஆப்பர்சூனிட்டி அவ்வளவு ஈஸியா வராது. அதனால இன்னும் கொஞ்சம் யோசிங்க. நானே யோசிச்சுத்தான் கேட்கிறேன் என இந்த புரோக்கர் நிர்மலா தேவி தனது பேச்சை நீல(ள)ம் ஆக்கிக் கொண்டே செல்கிறார்.

குறுக்கிட்ட அந்த மாணவிகள் வேண்டாம் மேம் என மறுக்கின்றனர். முழுமையாக புரோக்கராக மாறிய இந்த பேராசிரியை நான் சொல்ல வர்ற ரீசன் என்னன்னா, அந்த கவர்னர் மீட்டிங் வீடியோவுல நான் எந்த அளவுக்கு பக்கத்துல இருந்து எடுத்திருக்கேன்னு உங்களுக்கு தெரியும். அந்த அளவுக்கு என்னால மூவ் பண்ண முடியும். இந்த ஹிண்ட் மட்டும் தான் இப்போ கொடுப்பேன். ஏன்னா. அந்த அளவுக்கு ரகசியம் இது. என்னையவே நிறைய டெஸ்ட் பண்ணிருக்காங்க. அதுக்கப்புறம் தான் இந்த மாதிரி என்கிட்ட கேட்ருக்காங்க. நீங்க வேண்டாம்னு சொன்னா நா உங்க மார்க்குல எல்லாம் கை வெக்க மாட்டேன்டா. ஆனால் நீங்க யோசிங்க இந்த சந்தர்ப்பம் யாருக்கும் கிடைக்காது.

நா அடுத்த லெவல்க்கு போகபோறேன். கூட உங்கள கை துணைக்கு கூப்பிடுறேன். உங்களை கை தூக்கி விட கூப்பிடுறேன். இந்த காலத்துல நா பேச வர விஷயங்கள் எல்லாம் ரொம்ப சாதரணமான விஷயம், அது உங்களுக்கும் தெரியும், ஏன் இந்த உலகத்துக்கே தெரியும். யாருடைய பேச்சையும் கேட்காம நீங்களா யோசிச்சு சொல்லனும். நா சனிக்கிழமை ஈவ்னிங் கால் பண்றேன். ஓகே வா.

மாணவிகள் இதுக்கு மேல பேச வேண்டாம். எங்களுக்கு இஷ்டம் இல்ல மேம் என கூறுகின்றனர். ஓகே டா உங்களுக்கு இஷ்டம் இல்லனாலும், இதை பற்றி வெளியே சொல்ல வேண்டாம் என அந்த புரோக்கர் பேராசிரியை கூறுகிறார். மாணவிகள் சரி என கூறி தொடர்பை துண்டிக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து, மாணவிகள், கல்லூரி செயலாளரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் பேராசிரியை கல்லூரியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தங்களை அதிகாரிகளுக்கு படுக்கைக்கு அனுப்ப முயற்சித்த பேராசிரியை மீது மாணவிகள் புகார் அளித்தனர். ஆனால் கல்லூரி அந்தாசிரியை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த நிலையில் தான் , பேராசிரியை பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியதால் கல்லூரி நிர்வாகம் பேராசிரியை நிர்மலாவை 15 நாட்கள் பணியிடை இடைநீக்கம் செய்துள்ளது.

மாணவிகளிடம் பேசியதை ஒப்புக்கொண்டுள்ள புரோக்கர் நிர்மலா, தான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாக விளக்கம் கொடுத்துள்ளார். பேராசிரியை நிர்மலா, மாணவிகளுடன் பேசிய நோக்கத்திற்கு பின்னணியில் உள்ள உயர் அதிகாரிகள் யார்? இதை உடனே கண்டுபிடிங்க என பெற்றோர்கள் கோரிக்கை வலுக்கின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios