Procession carrying palm branches Christians worship on Palm Sunday Special
தர்மபுரி
தர்மபுரியில் உள்ள அனைத்து கிறித்தவ தேவாலயங்களிலும் “குருத்தோலை ஞாயிறு” சிறப்பு வழிபாடும், குருத்தோலைகளை கையில் ஏந்தி கிறத்தவர்கள் ஊர்வலுமும் சென்றனர்.
உலகமெங்கும் வாழும் கிறித்தவர்களின் முக்கிய திருநாளான “ஈஸ்டர்” விழாவிற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை “குருத்தோலை ஞாயிறு” என்பர். அன்று தேவாலாயங்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம்.
அதன்படி தர்மபுரியில் அனைத்து கிறித்தவ தேவாலயங்களிலும் குறுத்தோலை ஞாயிற்றையொட்டி சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. இதனையொட்டி கிறித்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
தர்மபுரி தூய இருதய ஆண்டவர் பேராலயம் மற்றும் சி.எஸ்.ஐ. ஆலயம் சார்பில் குருத்தோலை ஞாயிற்றையொட்டி சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது.
குமாரசாமிப்பேட்டைச் செங்குந்தர் திருமண மண்டபம் அருகில் இருந்து ஏராளமான கிறித்தவர்கள் குருத்தோலைகளை கைகளில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
இந்த ஊர்வலத்திற்கு மறை மாவட்ட முதன்மை குரு சூசை மாணிக்கம் தலைமை வகித்தார். தூய இருதய ஆண்டவர் பேராலய பங்குத்தந்தை மதலைமுத்து, பங்கு தந்தை மார்ட்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர், தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. இதில் பங்குத் தந்தைகள் சூசைராஜ், சர்க்கரையாஸ், உதவி பங்கு தந்தை ஜான்பால் உள்ளிட்ட ஏராளமான கிறித்தவர்கள் பங்கேற்றனர்.
