Private guard training school manager Two people arrested

திருநெல்வேலி

திருநெல்வேலியில் தனியார் காவலர் பயிற்சிப் பள்ளி நிர்வாகியை சரமாரியாகத் தாக்கிய இராணுவ வீரர் உள்பட இருவரை காவலாளர்கள் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் அருகே தனியார் காவலர் பயிற்சிப் பள்ளி ஒன்று உள்ளது. அதன் நிர்வாகி வெங்கடேசன்.

இவரது பயிற்சிப் பள்ளியில் அதேப் பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரர் சுரேஷ்குமார் என்பவரின் உறவினர் அங்கு பணம் செலுத்தி படித்து வந்தார்.

இந்த நிலையில் இரண்டு நாள்களுக்கு முன்னர் சுரேஷ்குமார் காவலர் பயிற்சிப் பள்ளிக்கு வந்துள்ளார். தனது உறவினர் செலுத்திய பணம் ரூ.50 ஆயிரத்தை திரும்ப கேட்டுள்ளார். பணத்தை திரும்ப தர முடியாது என்றதால் இராணுவ வீரர் சுரேஷ் குமாருக்கும், நிர்வாகி வெங்கடேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஒருக் கட்டத்தில் தகராறு முற்றி வெங்கடேசனை சுரேஷ்குமார் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் இராணுவ வீரர் சுரேஷ்குமார் உள்ளிட்ட இருவரை காவலாளர்கள் கைது செய்தனர்.