Asianet News TamilAsianet News Tamil

வேலைநிறுத்தத்தை சாதகமாக்கிக் கொண்டு தனியார் பேருந்துகள் இரண்டு மடங்கு கட்டணக் கொள்ளை;

Private buses are twice as lucrative as they take advantage of the strike
private buses-are-twice-as-lucrative-as-they-take-advan
Author
First Published May 15, 2017, 8:58 AM IST


அரசு பேருந்துகள் ஓடாததால் வெளியூர்களுக்கு தனியார் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன் மூலம் தனியார் பேருந்துகள் கொள்ளை லாபம் பார்ப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில்  பேருந்து இல்லாமல் வெளியூர் மக்கள் பலமணி நேரமாக காத்துக் கிடக்கின்றனர்.

இதையடுத்து அங்கு வந்த தனியார் பேருந்துகள் சென்னை, பெங்களூர், சேலம் உள்ளிட்ட மாநகரங்களுக்கு அனுப்பப்பட்டன. 57 பயணிகளை ஏற்ற வேண்டிய ஒரு பேருந்தில் 2 மடங்குக்கு மேலாக ஆட்களுக்கு மேலாக ஓட்டுநர்களும், நடத்துநர்களும் பொறுப்பற்ற முறையில் நடந்துக் கொண்டதாக பொதுமக்கள் புகார் எழுந்துள்ளது.

அதேபோல் கடலூர், சிதம்பரத்தில் இருந்து தனியார் மினி பேருந்துகளை சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட வெளியூர்களுக்கு இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். 

இதனை அடுத்து அதிகளவில் கட்டணத்தை கொடுத்ததும் இல்லாமல் பாதுகாப்பற்ற முறையிக்கு தள்ளப்பட்டனர். அரசு பேருந்துகள் ஓடாததால் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் வெகு நேரமாக காத்திருந்த வெளியூர் வாசிகள் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து அங்கிருந்த போக்குவரத்து அதிகாரிகளுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios