Asianet News TamilAsianet News Tamil

தனியார் பேருந்து நிறுவனத்துக்கு ரூ. 15 லட்சம் அபராதம்! ஆட்சியர் ரோகிணி அதிரடி!

Private bus company Rs. 15 lakh fine
Private bus company Rs. 15 lakh fine
Author
First Published Oct 25, 2017, 11:33 AM IST


கொசுப் புழுக்களை உற்பத்தி செய்யப்படும் வகையில் இருந்த தனியார் பேருந்து நிறுவனத்துக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, 15 லட்சம் ரூபாய்
அபராதம் விதித்துள்ளார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடுமையாக இருந்து வருகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதோடு மட்டுமல்லாமல், உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், டெங்குவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வீடுகள், கடைகள், அரசு - தனியார் அலுவலகங்களில் ஆய்வு செய்து வருகிறது.

அந்த வகையில் கொசுப்புழுக்களை ஏற்படுத்தும் வகையில் உள்ள வீடுகள், கடைகள், உள்ளிட்டவைகளுக்கு அபராதமும் விதித்து வருகிறது. 

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் டெங்கு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று டெங்கு கொசு குறித்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி, டெங்கு கொசு ஒழிப்பு குறித்து ஆய்வில் ஈடுப்ட்டுள்ளார். அப்போது, சேலத்தில், எல்.ஆர்.என். என்ற தனியார் போக்குவரத்துப் பணிமனையில் டெங்கு கொசு உற்பத்தியாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைப் பார்த்த ஆட்சியர் ரோகினி, தனியார் பேருந்து நிறுவனத்துக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். ஏற்கனவே, இந்த பேருந்து பணிமனையில் கொசு உற்பத்தி இருந்ததால் மாநகராட்சி இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்திருந்தது. இதன் பின்னரும், தண்ணீர் தேங்கியிருப்பதை சரிசெய்யாத பேருந்து நிறுவனத்துக்கு மாவட்ட ஆட்சியர் ரோகிணி 15 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios