வேலூரில் நடைப்பெற்ற திருவிழாவில் எங்களுக்குதான் முன்னுரிமை என்று இருதரப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சண்டை போட்டதால் திருவிழா போர்க்களம் போல காட்சியளித்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள வளையம்பட்டு என்ற கிராமத்தில் கோவில் திருவிழா நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருன்தன.

இந்த கிராமத்தில் இரண்டு வெவ்வெறு சாதியைச் சேர்ந்த தரப்பினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு தரப்பினர் எங்களுக்குதான் அதிகமான முன்னுரிமை உள்ளது என்று தெரிவித்தனர். நாங்கள் அவர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. எங்களுக்கே முன்னுரிமை உள்ளது என்று மற்றொரு தரப்பினரும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று கூட்டத்தில் இருந்த இருதரப்பைச் சேர்ந்த இளைஞர்கள் அடிதடியில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு தரப்பினருக்கும் பயங்கர சண்டை ஏற்பட்டது. இந்த சண்டையால் அந்த கிராமம் போர்களமாக மாறியது.

பின்னர், காவல்துறையின் உதவியோடு அந்த சண்டை நிறுத்தி வைக்கப்பட்டது. திருவிழாவும் சில மணி நேரங்கள் ஒத்திவைக்கப்பட்டது.