prime minister modi wil participate today in daily thanthi function

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று நடைபெறவுள்ள தினத்தந்தி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பவள விழா சிறப்பு மலரை வெளியிடுகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தினத்தந்தி நாளிதழின் பவளவிழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை கொண்டாடும் விதமாக, சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று தினத்தந்தியின் பவள விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று காலை 7.10 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார். காலை 9.55 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை அவர் வந்தடைகிறார்.

பின்னர் காலை 10 மணி அளவில் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி, 10.20 மணிக்கு மெரினா கடற் கரை அருகேயுள்ள ஐ.என்.எஸ். அடையார் ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்குகிறார். அங்கு அவரை அமைச்சர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் வரவேற்கிறார்கள்.

அங்கிருந்து காரில் புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி, காலை 10.30 மணி அளவில் ‘தினத்தந்தி’ பவள விழா நடைபெறும் சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்ட பத்துக்கு வருகிறார்.

இந்த விழாவில் தினத்தந்தி’ பவள விழா சிறப்பு மலரை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார். மேலும், விருதுகளை வழங்கி உரையாற்றுகிறார்.