Asianet News TamilAsianet News Tamil

பிரியாணி பிரியர்களுக்கு திடீர் அதிர்ச்சி..!! வெங்காயத்தால் வந்த வினை..!! நீங்களே பாருங்க...

.  எனவே பிரியாணியின் பழைய மனமும் சுவையும் கிடைக்கவில்லை என வாடிக்கையாளர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். 
 

price hike reaction briyani price increased - nearly 10 rs to 50 rs onion
Author
Chennai, First Published Dec 12, 2019, 11:29 AM IST

வெங்காய விலை உயர்வின்  எதிரொலியாக பத்து ரூபாய் முதல் 50 ரூபாய் வரை பிரியாணி விலை உயர்த்தப்பட்டுள்ளன . நாடு முழுவதும் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை 200 ரூபாயை எட்டியுள்ளது .  இந்நிலையில் வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.  ஆனாலும் வெங்காயத்தின் விலை  இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை .

 price hike reaction briyani price increased - nearly 10 rs to 50 rs onion

இந்நிலையில் கோவையில் வெங்காய விலை கடுமையாக உயர்ந்து தற்போது சற்று குறைந்திருந்தாலும் ,  தாக்குப் பிடிக்க முடியாத பிரியாணி கடைகள்  வியாபார உத்தியாக வெங்காயத்திற்கு பதிலாக வெள்ளரிக்காய் மற்றும் கேரட் பச்சடி களை வழங்க தொடங்கியுள்ளனர் .  அதாவது பிரியாணி சமைக்க வெங்காயம் பயன்படுத்துவதை தவிர்க்க முடியாததால்  ஒரு பிளேட் பிரியாணி மீது 10 ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாய் வரை விலையை  கடைகள் உயர்த்தியுள்ளன.  உயர்த்தப்பட்டாலும் இன்னும்கூட  வெங்காயத்தை அதிக அளவில் பிரியாணியில் பயன்படுத்த முடியவில்லை .  எனவே பிரியாணியின் பழைய மனமும் சுவையும் கிடைக்கவில்லை என வாடிக்கையாளர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். 

price hike reaction briyani price increased - nearly 10 rs to 50 rs onion

ஒருகட்டத்தில் 200 ரூபாய் விற்ற வெங்காயத்தில் விலை தற்போது அரசின் நடவடிக்கையால் 120 ரூபாயாக குறைந்துள்ளது .  மேலும் குறைந்து சகஜ நிலைக்கு திரும்பினால் மட்டுமே பிரியாணிக்கு வெங்காயப் பச்சடி கிடைக்கும் என்றும் ,  வெங்காய தட்டுப்பாட்டால் குறைந்த பிரியாணியின் சுவை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பும் என்றும்  வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios