Preparing of Permanent Electoral List - Demonstration of Rural Development Officers ...
திருப்பூர்
வீண் செலவுகளை குறைக்கும் பட்சத்தில் நிரந்தர வாக்காளர் பட்டியலை ஊராட்சி வார்டு வாரியாக தயாரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக் கிளையினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ராஜகோபால் வரவேற்றுப் பேசினார். மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், மாநிலத் துணைத் தலைவர் ரமேஷ், அரசு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் அம்சராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், “மக்கள் உடனடியாக அரசு நிர்வாகத்தை அணுகக் கூடிய வகையிலும், அவர்களின் பயண நேரம் குறையக் கூடிய வகையிலும் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சிகளை பிரிக்க வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதியை மக்களுக்கு விரைவில் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வீண் செலவுகளை குறைக்கும் பட்சத்தில் நிரந்தர வாக்காளர் பட்டியலை ஊராட்சி வார்டு வாரியாக தயாரிக்க வேண்டும்” என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்கப்பட்டன. முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
இதில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டக் கிளையினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
