முதல்வரை பக்கத்துல வச்சிக்கிட்டே இப்படி கிறுக்குத்தனமாக பேசலாமா? சீனியர் அமைச்சரை சீண்டிய பிரேமலதா..!
உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மதுபானம் தேவை. ஆனால், டாஸ்மாக் மதுபானம் சாஃப்ட் டிரிங்க் போல உள்ளதாகவும் கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள் என்று கூறினார். மூத்த அமைச்சர் துரைமுருகன் பேச்சுக்கு பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை என ஒரு மூத்த அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பது கிறுக்குத்தனமான செயல் என்று பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கள்ளச்சாரயத்தை ஒழிக்கும் வகையில் நேற்று சட்டப்பேரவையில் மதுவிலக்கு திருத்த மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார். அப்போது இந்த மசோதா குறித்து சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்: உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மதுபானம் தேவை. ஆனால், டாஸ்மாக் மதுபானம் சாஃப்ட் டிரிங்க் போல உள்ளதாகவும் கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள் என்று கூறினார். மூத்த அமைச்சர் துரைமுருகன் பேச்சுக்கு பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நிவாரணம் கொடுத்துட்டா மட்டும் கடமை முடிஞ்சது நினைக்காதீங்க! இந்த விபத்துக்கு திமுக தான் காரணம்! டிடிவி.தினகரன்
இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: சட்டசபையில் துரைமுருகன் பேச்சை கேட்டு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 உயிர்களை இழந்து வாடும் பட்டியல் இன மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. துரைமுருகன் டாஸ்மாக்கில் கிக் இல்லை, என்று கிறுக்குத்தனமாக அறிக்கை வெளியிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குறியது.
டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை..." என ஒரு மூத்த அமைச்சர், அதுவும் சட்ட சபையில் முதலமைச்சரை வைத்துக் கொண்டே கூறுவது, கிறுக்குத்தனமான ஒரு செயலாகத் தான் மக்கள் அனைவருமே பார்க்கிறார்கள். மூத்த அமைச்சர் இப்படியொரு பதில் அளிப்பது மிக மிகக் கண்டனத்திற்குறியது. டாஸ்மாக் கடைகளில் கிக் இல்லை, என்றால் அந்த அளவுத் தரம் இல்லாத ஒரு டாஸ்மாக்கை தமிழக அரசு நடத்துகிறது. இந்த தரம் இல்லாத அரசு தன் நிலையை தாங்களே ஒப்புக்கொண்டுள்ளது என்பதுதான் இதற்கு அர்த்தம். டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக ஒழித்து, போதை இல்லா தமிழகத்தை உருவாக்கத் தற்போதைய தமிழக அரசு நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: வார்த்தை அலங்காரங்கள் தேவையில்லை: மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாதது அரசின் இயலாமை - அன்புமணி காட்டம்
குடியை மக்களுக்குக் கொடுத்துக் கோடிகளை நீங்கள் சம்பாதிக்க கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றுவது ஏற்புடையதல்ல. எனவே தமிழகத்தில் ஏற்பட்ட இத்தனை இறப்புகளுக்கும் தற்போதைய தமிழக அரசு தான் காரணம் என்பதை துரை முருகன் அவர்கள் தன் வாயினாலே ஒப்புக்கொண்டார். ஒரு மூத்த அமைச்சரின் இந்த செயல் மிகவும் கண்டனத்திற்குறியது என்று கூறியுள்ளார்.