யூடுபில் வீடியோ பார்த்து பிரசவம் செய்த பொது நடந்த அசம்பாவிதத்தால் கர்பிணிப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அருகே நல்லூர் புதுப்பாளையம் சேர்ந்த கார்த்திக். திருப்பூரில் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி கிருத்திகா தனியார் பள்ளி ஆசிரியை. இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணமானது. கார்த்திக் மனைவி கிருத்திகா கர்பமான விஷயத்தை எல்லோருக்கும் சொல்லி சந்தோஷபட்டிருக்கிறார் கார்த்திக். இந்நிலையில், கார்த்திக்கின் நெருக்கமான நண்பர் பிரவீன். அடிக்கடி கார்த்திக் வீட்டுக்கு வந்து போக இருந்த பிரவீன் அப்போது நண்பனுக்கு பிரசவ டிப்ஸ் கொடுத்திருக்கிறார்.

அது என்ன டிப்ஸ் னா? ‘உன்னோட மனைவி கர்ப்பமானதும் நீ ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகாதே. நாம வீட்டுலேயே வெச்சு பிரசவம் பார்க்கலாம். அந்த காலத்திலெல்லாம் ஹாஸ்பிடலா இருந்துச்சு? எல்லாமே வீட்டில்தான் பார்த்திருக்கிறாங்க. அதுவும் இயற்கை முறையிலேயே இப்போ பார்க்க முடியும் என சொல்லிருக்கிறார். அப்போது, அந்தக் காலத்தில் பிரசவம் பார்ப்பது எப்படின்னு யூட்யூப் போய் போட்டா வீடியோ வருது. அதைப் பார்த்தே நாமலே பிரசவத்த பாத்துக்கலாம். என சொன்ன பிரவீன். செக்அப்புக்கு கூட உன் மனைவியை டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகாத டா. அப்புறம் டெலிவரிக்கு வரச் சொல்லுவாங்க’ என  மனதை மாற்றியுள்ளார், நண்பன் சொல்வதைக் கேட்டுவந்துள்ளார், நண்பனின் இந்த ஐடியாவை மனைவியிடமும் இதைச் சொல்லியிருக்கிறார் கார்த்திக்.

முதலில் கிருத்திகா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் பிறகு அவரும் மனம் மாறி யூட்யூப் பிரசவத்துக்கு ஓகே சொல்லியிருக்கிறார். கிருத்திகா கர்ப்பமடைய, அவரை செக்அப் உட்பட எதற்கும் மருத்துவமனைக்கே அழைத்து செல்லவில்லை. நாட்கள் நகர்ந்திருக்கிறது. கிருத்திகாவின் உறவினர்கள் எவ்வளவோ அட்வைஸ் செய்தும் கேட்கவில்லை.

பிரசவத்துக்கு நாளும் நெருங்கியது. வயிற்றுவலியால் துடித்திருக்கிறார் கிருத்திகா. கணவர் கார்த்திக்கும் அவரது நண்பர் பிரவீனும் தயாராக வைத்திருந்த செல்போனில் பிரசவம் பார்க்கும் வீடியோவை ஓடவிட்டு, அதைப் போலவே செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். ஏதேதோ முயற்சி செய்து குழந்தையை வெளியே இழுத்துவிட, வலியால் அலறித் துடித்து கடைசி மூச்சையும் இழுத்து நிறுத்திக் கொண்டார். ஆமாம், கிருத்திகா உயிர் பிரிந்துவிட்டது. குழந்தையை எப்படியோ கண்டபடி வயிற்ருக்குள் இருந்து இழுத்து பலத்த காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறது.