Asianet News TamilAsianet News Tamil

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு...! முக கவசம் கட்டாயம்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் அவசர கடிதம்

டெல்லி,மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Precautionary measures should be intensified due to the increasing incidence of corona Secretary of Health
Author
Tamilnadu, First Published Apr 20, 2022, 9:29 AM IST

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் உயிர் பிழைப்பதே அதிசயம் என்ற நிலையில் இருந்து தற்போது ஓரளவு மீண்டு வந்துள்ளனர். கட்ந்த 3 மாதங்களாக குறைந்து வந்த கோரானா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்த தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தநிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 
டெல்லியில் ஏப்ரல் 4 ஆம் தேதி ஒரு நாளைக்கு 82 வழக்குகள் இருந்த நிலையில், நேற்று கோவிட் பாதிப்புகள்  632 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.   1 சதவீதத்திற்குக் கீழே இருந்து கொரோனா பாசிட்டிவ் விகிதம்  சுமார் 5 சதவீதத்திற்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். உ.பி., ஹரியானா மற்றும் மஹாராஷ்டிராவிலும் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து காணப்படுவதாகவும் கூறியுள்ளார். . ஏப்ரல் 18-ம் தேதியில்  சர்வதேச அளவிலும் OMICRON பாதிப்பு ஒரு நாளைக்கு 7.45 லட்சம் என்ற அளவில் இருந்து வருவதாக கூறியுள்ளார். தமிழகத்தில் மாறுபட்ட பாதிப்பு இல்லையென்று தெரிவித்தவர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.

Precautionary measures should be intensified due to the increasing incidence of corona Secretary of Health

தயார் நிலையில் மருத்துவ உபகரணம்
 
ஒரு நாளைக்கு 25க்குக் கீழே இருந்த கொரோனா பாதிப்பு தற்பு  30க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பதிவாகியுள்ளதாகவும் , 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.மேலும் கொரோனா பாதிப்பு தொடர்புகளை கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டவர், பரிசோதனைகளையும் அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் முக்கவசத்தை தமிழகத்தில் திரும்ப பெறப்படவில்லையென தெரிவித்தவர் எனவே முக்கவசத்தை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் மருத்துவமனையில் தேவையான மருந்து மற்றும் உபகரணங்கள்  தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

Precautionary measures should be intensified due to the increasing incidence of corona Secretary of Health

கொரோனா-கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

மற்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது கவலை அளிப்பதாக இருந்தாலும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்போரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார். இருந்த போதும் கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios