தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதலமைச்சரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் சில தினங்களுக்கு அவர் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனிடையே முதலமைச்சரின் உடல் நிலை குறித்து அவ்வப்போது அப்பல்லோ மருத்துவமனையும், அதிமுகவினரும் தகவல்களை அளித்து வருகின்றனர்.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அப்பல்லோ மருத்தவமனை தலைவர் பிரதாப் ரெட்டி முதலமைச்சர் நலமுடன் உள்ளார் என்றும், அவர் எப்பொழுது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பது குறித்து அவரே முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

முதலமைச்சர் ஜெயலலதா பிசியோ தெரபி சிகிச்சையால் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

மனவலிமை மிக்க முதல்வர் விரைவாக குணம் பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும். முதல்வர் விரும்பினால் எப்பொழுது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம் என்றும் தெரிவித்தார்.

இதனால் அதிமுக தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.