முதலமைச்சர் பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் பேசிய , 110 வது விதியின் கீழ், மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாளான அக்டோபர் 1, ஆம் நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்.

சிவாஜி கணேசன் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் பிரபு, ஜெயலலிதா, கருணாநிதி, வாகை சந்திர சேகர் உள்ளிட்ட பலரின் ஆசையை நிறைவு செய்யும் விதத்தில் உள்ளதாக கூறி நன்றி தெரிவித்தார்.