Power lights with high efficiency in school function
ஏர்வாடி இந்து தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழாவின் போது அதிக திறன் கொண்ட மின் விளக்குகள் பயன்படுத்தியதால் 100க்கும் மேற்கட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே இந்து தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் அதிக திறன் கொண்ட மின்விளக்குகள் பயன்படுத்தியுள்ளனர்.
மின்விளக்குகளிலிருந்து வெளிவந்த கதிர்வீச்சுகள் காரணமாக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட அனைவருக்கும் கண்ணில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து விழா முடிந்து வீட்டிற்கு சென்றதும் அனைவருக்கும் கண் எரிச்சல் அதிகமாகியுள்ளது.
இதைதொடர்ந்து இன்று காலை அனைவரும் பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர்களை பள்ளி நிர்வாகம் சார்பில் திருநெல்வேலி தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய கண் மருத்துவர், மாணவர்களுக்கு பயப்படும் வகையில் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் அதிக திறன் கொண்ட ஹாலஜன் விளக்கின் கேஸ் கசிவு காரணமாகவே கண்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என்றும் குறிப்பிட்டார்.
