Power Cut At Andhra Govt Hospital During Surgery Doctors Continue Procedure Under Mobile Torch
சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். திருமணமாகாத இவருக்கு அந்த பகுதியை சேர்ந்த 2 வாலிபர்களுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணம் செய்வதாக கூறி அந்த பெண்ணுடன் வலுக்கட்டாயமாக 2 பேரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் கர்ப்பமானார்.
இதையறிந்து அதிர்ச்சி அடைந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் அவர்கள் 2 பேரும் திருமணம் செய்ய மறுத்து விட்டனர். இதற்கிடையே நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அந்த பெண் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த வாலிபர்கள் குறித்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் குழந்தைக்கு தந்தை யார்? என்பது குறித்து விரைவில் மரபணு சோதனை நடத்தப்படும் எனவும் தெரிகிறது.
பச்சிளம் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற தாய்
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ளது வெய்க்காலிபட்டி கிராமம். இங்குள்ள இந்திரா காலனியைச் சேர்ந்தவர் சாத்தாக்குட்டி (வயது 27), கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (24). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் லட்சுமி மீண்டும் கர்ப்பமானார்.
இதையடுத்து கடந்த 7.12.2017 அன்று லட்சுமிக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆர்யா என்று பெயரிட்டனர். ஆனால் சாத்தாக்குட்டி தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தாராம். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று 2½ மாத குழந்தையான ஆர்யா வீட்டில் பின்புறம் உள்ள தண்ணீர் நிரப்பிய பிளாஸ்டிக் டிரம்மில் பிணமாக மிதந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த லெட்சுமி வீட்டில் இருந்து வெளியே வந்து யாரோ மர்ம நபர்கள் தனது வீட்டிற்குள் புகுந்து குழந்தையை டிரம்மில் அமுக்கி கொலை செய்து விட்டதாக லட்சுமி தெரிவித்தார். இதுகுறித்து கடையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகீர்உசேன், கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் குழந்தையின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணை லட்சுமி அங்கிருந்து நைசாக வெளியேறி வெய்க்காலிபட்டி கிராம நிர்வாக அலுவலர் அருணாசலத்திடம் சரண் அடைந்தார். இதுகுறித்து போலீசுக்கு கிராம நிர்வாக தகவல் தெரிவித்தார். போலீசார் லட்சுமியை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில், எனக்கு 3-வது ஆண் குழந்தை பிறந்ததும் குடும்பத்திற்கு ஆகாது என அக்கம் பக்கத்தினர் என்னிடம் கூறினர். அதே போல் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு வந்தது. மேலும் குழந்தை ஆர்யாவுக்கு இருதயத்தில் பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அடிக்கடி குழந்தையால் மருத்துவ செலவு வந்தது. மேலும் எனது கணவர் சாத்தாக்குட்டியும் எனது நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தார். இதனால் எங்களுக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலையிலும் தகராறு ஏற்பட்டது. பின்னர் கணவர் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். கணவர் எனது நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் தகராறு செய்வதாலும், குழந்தையால் மருத்துவ செலவு அதிகரித்து வந்ததாலும் மனமுடைந்த நான் பச்சிளம் குழந்தையை கொல்ல முடிவு செய்தேன்.
இதையடுத்து குழந்தை ஆர்யாவை வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீர் நிரப்பிய டிரம்மில் மூழ்கடித்து கொலை செய்து விட்டு பின்னர் ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடி பொதுமக்களிடம் எனது குழந்தை யாரோ தண்ணீரில் மூழ்கடித்து கொன்று விட்டார்கள் என கூறினேன் என கூறியிருக்கிறார்.
போன டார்ச் லைட் வைத்து ஆபரேஷன் செய்த டாக்டர்கள்....
ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவமனையில் மின்சாரம் தடைபட்டதால், டாக்டர்கள் மொபைல் போன் வெளிச்சத்தில் ஆபரேஷன் செய்து முடித்தனர்.
ஆந்திரப்பிரதேசத்தின் குண்டூரில் அரசு மருத்துவமனையில் நாய் கடித்ததால் சேதமடைந்த மூக்குப்பகுதிக்கு சிகிச்சை பெற நோயாளி ஒருவர் வந்தார். அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 10-ம் தேதி அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டதால், டாக்டர்கள் தங்களிடம் இருந்த மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு வெற்றிகரமாக ஆபரேஷன் செய்து முடித்தனர்.
