திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக முன்னிலையில் உள்ளது.
Add Asianetnews Tamil as a Preferred Source

கடந்த 19ம் தேதி தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுவையில் நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இடைத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது.
திருப்பரங்குன்றம் தொகுதி வாக்குஎண்ணிக்கையில் முதல் சுற்றில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் 48 வாக்குகள் இருந்தன. அதனை எண்ணிக்கை செய்தபோது, 2 வாக்குகள் செல்லாதது என தெரிந்தது. 44 வாக்குகள் பெற்று அதிமுக முன்னிலையில் உள்ளது. 2 வாக்குகள் பெற்று திமுக பின் தங்கியது.
2வது சுற்றாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை இன்னும் சில நிமிடங்களில் தெரியவரும்
