ராமநாதபுரத்தில் வாங்கிய கடனை திருப்பி தருமாறு கேட்டவருக்கு இளம்பெண் ஒருவர் அவரது ஆபாச புகைப்படங்களையும், வீடியோக்களையும் அனுப்பி விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இளம்பெண் மீது அந்த நபர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தைச் சேர்ந்த பழனிவாசகம். இவருக்கும் உச்சிப்புளி அருகே சூரன்காட்டு வலசையைச் சேர்ந்த பிரீத்தி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது பிரீத்தி தன்னிடம் அவசரமாக பணம் தேவைப்படுகிறது கடனாக இரண்டரை லஞ்சம் ரூபாய் தருமாறு கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த நபர் நம்பி பணத்தை கொடுத்துள்ளார். இதன்பின்னர் வாங்கிய கடனை திருப்பி தருமாறு கேட்கும் போதேல்லாம் ஆபாச புகைப்படங்களையும், குளிப்பது, உடை மாற்றுவது போன்ற வீடியோக்களையும் பிரீத்தி அனுப்பியுள்ளார்.

 

இந்த விவகாரம் தொடர்பாக மண்டபம் காவல்நிலையத்தில் பழனிவாசகம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அந்த பெண் மீது மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.