Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு நேற்று முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 8ம் தேதி மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த்து. இதனால், பொதுமக்கள் தினமும் அதிகாலை முதல் மாலை வரை ஏடிஎம் மையங்கள், வங்கிகளில் கால்கடுக்க காத்திருந்து பணம் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.

இதனால், பொதுமக்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றவும், அன்றாட செலவுக்கு பணம் எடுப்பதற்கும் முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் ரூபாய் நோட்டு விவகாரம் காரணமாக நாகர்கோவிலில் உள்ள மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வீட்டை, பொதுமக்கள் நேற்று முற்றுகையிட போவதாக பல்வேறு அமைப்பினர் அறிவித்தனர்.

இதை தொடர்ந்து அவரது வீட்டுக்கு 2 எஸ்ஐக்கள் தலைமையில் 25க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.