Asianet News TamilAsianet News Tamil

பண மோசடி வழக்கில் கைதான யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன்.. பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவு..

பாஜகவை சேர்ந்த யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன் வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுவாச்சூரில் உள்ள அம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
 

Poonamallee court grants bail to youtuber Karthik Gopinath
Author
Tamilnádu, First Published Jun 8, 2022, 12:50 PM IST

பாஜகவை சேர்ந்த யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன் வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுவாச்சூரில் உள்ள அம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பாஜக ஆதரவாளரான கார்த்திக் கோபிநாத் என்பவர் இளைய பாரதம் என்ற யூடியூபர் சேனலை நடத்தி வந்தார். இந்நிலையில் இவர் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோவிலை சீரமைப்பதற்கு இணையதளம் ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் நிதி திரட்டி வந்தார். 

ஆனால் இந்துசமய அறநிலையத்துறையிடம் முறையாக அனுமதி பெறாமல் கோயில் பெயரை பயன்படுத்தி சுமார் 36 லட்சம் ரூபாய் வசூல் செய்து மோசடி செய்ததாக அக்கோவில் செயல் அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த 30 ஆம் தேதி காலை யூடியூபர் கார்த்திக் கைது செய்தனர். 

தொடர்ந்து யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் கோரி சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 1 ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மனுவை விசாரித்த பூந்தமல்லி நீதிபதி பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் பாஜகவை சேர்ந்த யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன் வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவில் திருப்பணிகளுக்காக முறைகேடாக பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
 

மேலும் படிக்க: கோவில் பெயரை பயன்படுத்தி 36 லட்சம் மோசடி புகார்.. யூடியூபர் கார்த்திக் கோபிநாத் ஜாமீன் மனு தள்ளுபடி..

Follow Us:
Download App:
  • android
  • ios