ஒன்னுத்துக்கும் ஆகாத பொங்கல் பரிசு தொகுப்பு… பூரா வண்டு… கேட்டா அடிக்க வராங்க!!
இராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தில் ரேஷன்கடையில் வழங்கப்பட்ட பொங்கள் பரிசு தொகுப்பில் 18 பொருட்கள் மட்டுமே இருப்பதாகவும் அந்த பொருட்களும் தரமற்ற வகையில் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தில் ரேஷன்கடையில் வழங்கப்பட்ட பொங்கள் பரிசு தொகுப்பில் 18 பொருட்கள் மட்டுமே இருப்பதாகவும் அந்த பொருட்களும் தரமற்ற வகையில் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 20 பொருட்கள் மற்றும் முழு கரும்பு கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த பரிசுத் தொகுப்பில், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு மற்றும் மஞ்சள் துணிப்பை வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் 2,15,48,060 குடும்பங்களுக்கு இப்பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். இதற்கான செலவு ரூ1,088 கோடியாகும். ஏற்கனவே பொங்கல் பரிசுத் தொகுப்பு பைகள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் கொரோனா பரவல் காலம் என்பதால் ரேஷன் கடைகளில் கூட்டம் ஏற்படாத வகையில் டோக்கன்களும் வழங்கப்பட்டுள்ளன. டோக்கன்கள் அடிப்படையில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். இந்த திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் டோக்கன்கள் அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தில் ரேஷன்கடையில் வழங்கப்பட்ட பொங்கள் பரிசு தொகுப்பில் 18 பொருட்கள் மட்டுமே இருப்பதாகவும் அந்த பொருட்களும் தரமற்ற வகையில் இருப்பதாகவும் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். மேலும் கொடுக்கப்பட்ட அனைத்து பொருட்களிலும் வண்டு இருப்பதாகவும் வெல்லம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அந்த பெண் தெரிவித்தார். இதுக்குறித்து பேசிய மூதாட்டி, தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவது குறித்து கலைஞர் மகனிடம் தான் கூறப்போவதாக தெரிவித்ததை அடுத்து அந்த மூதாட்டியை அங்கிருந்த ரேஷன் கடைக்காரர்கள் தாக்க வந்ததாகவும் புலம்பி தள்ளினார். கூறியபடி 21 பொருட்களும் வழங்கவில்லை, கொடுக்கப்பட்ட 18 பொருட்களிலும் வண்டு மற்றும் தரமற்றதாக உள்ளது. இது ஒன்னுத்துக்கும் ஆகாது. இதை எப்படி சாப்பிடுவது என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறார் அந்த பெண். இதுக்குறித்த வீடியோவுக்கு பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.