ஒவ்வொரு ஆண்டும் ஜன 15ஆம் தேதி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசின் பொங்கல் பண்டிகைக்கான சிற்ப்பு பரிசு தொகுப்பை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இந்த பரிசு தொகுப்பு திட்டத்தால் 1 கோடியே 80 லட்சம் குடும்பத்தினர் பயன்பெறுவர்.

ரேஷன் கார்டு எனப்படும் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும்.

பொங்கல் பரிசு தொகுப்பு பைகளை அவரவர் பகுதிக்குட்பட்ட சம்மந்தப்பட்ட ரேஷன்கடைகளில் குடும்ப அட்டைகளை காண்பித்து பெற்று கொள்ளலாம்.

அரிசி குடும்ப அட்டைக்காரர்கள் மற்றும் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கும் இந்த பரிசு தொகுப்பு கிடைக்கும்.

பொங்கல் பரிசு தொகுப்பு பைகளில் 1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை, வெல்லம், கரும்பு, ஏலக்காய்,,திராட்சை ஆகியவை கிடைக்கும்.