சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரம்பரிய முறையில் பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
 

Pongal festival celebrated in traditional manner at Salem District Collectorate

தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று நாடு முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் விமர்சியாக நடைபெற்றது. குறிப்பாக அனைத்து அலுவலர்களும் பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை அணிந்து வந்து பொங்கல் விழாவில் பங்கேற்றனர்.

வாகரையில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த மாரத்தான் போட்டி!

மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வேஷ்டி சட்டையில் கலந்துகொண்டு மாட்டு வண்டியில் ஏறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வெளிநாட்டினர் சமத்துவ பொங்கல்விழாவில் கலந்து கொண்டு மாட்டு வண்டியில் ஏறி பயணம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடத்தப்பட்டது. இதில் உரியடி போட்டியில் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு உறியடித்தனர்.

தமிழ்நாடு வாழ்க என்று முழக்கமிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் பொங்கல் கொண்டாட்டம்!

பின்னர் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக நடனமாடிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவிழா நடைபெறும் கிராமம் போல் காட்சியளித்தது.

Pongal: பழனிக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்: 3 மணி நேரமாக காத்திருந்து சாமி தரிசனம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios