Pongal celebration of Chennai Jain College
சென்னை ஜெயின் கல்லூரி பொங்கல் கொண்டாட்டத்தில் மாணவிகள் வேட்டி கட்டி வந்து அசத்தினர்.
தமிழர்கள் பொங்கல் திருநாளை மூன்று நாட்கள் கொண்டாடுகிறார்கள். முதலாவது நாள் பெரும்பொங்கல். அன்று அனைவரும் புத்தாடை அணிவார்கள்.
இரண்டாவது நாள் மாட்டுப் பொங்கல். அன்று மாடுகளை நன்றாக அலங்கரிப்பார்கள். மூன்றாவது நாள் காணும் பொங்கல். அன்று மக்கள் ஒருவரையொருவர் சந்தித்து மகிழ்வார்கள்.
இம்முறையே காலம் காலமாக நடைபெற்று வருவது வழக்கம். வழக்கமாக ஆண்கள் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையும் பெண்கள் பட்டுப்புடவை அணிந்தும் பொங்கல் திருநாளை கொண்டாடுவார்கள்.
இத்தகைய பொங்கல் திருநாள் இந்த ஆண்டு நாளை தொடங்குகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகள், பல்கலை கழகங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியன முந்தைய நாளே பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு சென்னை கல்லூரி மாணவ மாணவிகள் புத்தாடை அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.
அதில் ஒரு பகுதியாக ஜெயின் கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது. அப்போது மாணவிகள் ஆண்கள் அணியும் வேட்டி சட்டை, கூலிங் கிளாஸ் அணிந்து வந்து கெத்து காட்டினர்.
