வறுமைக் கோட்டிற்கு கீழ் மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகையான 1000 ரூபாய் வழங்க தடை விதித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. 

வறுமைக் கோட்டிற்கு கீழ் மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகையான 1000 ரூபாய் வழங்க தடை விதித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் பொங்கல் பரிசு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகை ரேஷன் கடைகளில் திங்கட்கிழமை முதல் ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதை நிறுத்தி வைக்க உத்தரவிடவேண்டும் என கோவையைச் சேர்ந்த டேனியல் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

இதனையடுத்து பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கக் கூடாது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும். வசதியானவர்களுக்கு கொடுக்கும் பணத்தை கஜா புயல் நிவாரண நிதிக்கும் சாலை போடுவதற்கும் பயன்படுத்தலாம்’’ என உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதனைத் தொடர்ந்து பொங்கல் பரிசுடன் ரூ.1,000 வழங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. ஆனால், அந்த மனுவை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. இதனால், வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு 1000 ரூபாய் பணம் கிடைக்க வாய்ப்பில்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.