கடத்தல் சிலைகளை வைத்திருப்போர்கள் தாமாக முன்வந்து சிலைகளை ஒப்படைத்தால், எந்த நடவடிக்கையும் கிடையாது என்றும் அல்லது ஒரு வருடம் கழித்து ஒப்படைத்தாலோ அல்லது மாட்டிக் கொண்டாலோ சிறைதான் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். சிலை கடத்தல் வழக்கில் தீனதயாளன் என்பவரை ஏற்கனவே போலீசார் கைது செய்துள்ளனர். 

தொழிலதிபர் ரன்வீர் ஷா என்பவரிடம் சிலைகளை விற்றதாக தீனதயாளன், சிலை தடுப்பு பிரிவு போலீசாரிடம் விசாரணையின் போது தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில், சென்னை சைதாப்பேட்டையில் ஸ்ரீநகர் காலனியில் ரன்வீர் ஷா வீட்டில் கடந்த வாரம் சோதனை சோதனை நடத்தப்பட்டது. அப்போது 60 பழங்கால சிலைகள் கைப்பற்றப்பட்டன. 

அதில் 4 சிலைகள் ஐம்பொன் சிலைகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தொழிலதிபர் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில், ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 சிலைகளை கைப்பற்றினர். இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், இன்று ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான பண்ணைவீட்டில்சோதனை நடத்தப்பட்டது. இதில் 50 சிலைகள், 100 கற்தூண்கள் கைப்பற்றப்பட்டன.

தமிழகத்தில் மிக முக்கிய தொழிலதிபர்களிடம் கடத்தல் சிலைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்த சிலைகளை அவர்கள் ஒரு மாதத்துக்குள்ளாகவே ஒப்படைத்தால் நல்லது என்றார். அந்த சிலைகளை அவர்கள் ஒரு மாதத்துக்குள்ளாகவே ஒப்படைத்தால் நல்லது என்றும் இவ்வாறு கடத்தல் சிலைகள் ஒப்படைக்கப்பட்டால் எந்தவித நடவடிக்கையும் கிடையாது. ஆனால் ஒரு வருடம் கழித்து ஒப்படைத்தாலோ அல்லது மாட்டிக் கொண்டாலோ ஜெயில்தான் என்று கூறினார்.