policemen who seized 20 lakhs suspended
கடலூரில் 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
நாகூரை சேர்ந்த ஜலால் என்பவர் தனது 50 லட்சம் ரூபாய் பணத்துடன் பேருந்தில் வந்துள்ளார். கடலூர் அருகே வரும்போது 3 போலீசார் திடீரென பேருந்தை வழிமறித்து அவரிடமிருந்த பேக்கை சோதனை செய்தனர்.
அப்போது அவர் ரூ. 50 லட்சம் வைத்திருப்பது தெரியவந்தது. பின்னர் பணம் வைத்திருந்த ஜலாலை பேருந்தில் இருந்து இறக்கி அவரிடம் இருந்து ரூ. 20 லட்சத்தை வழிப்பறி செய்துள்ளனர்.
மேலும் இதை வெளியே சொல்லக்கூடாது என ஜலாலை மிரட்டியுள்ளனர். இதுகுறித்த விவகாரம் வெளியே தெரிந்ததால் போலீசார் 3 பேரும் பணத்தை ஆள்பேட்டை புதரில் வீசிவித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து ஜலால் கடலூர் எஸ்.பி விஜயகுமாரிடம் புகார் அளித்தார். தகவலறிந்த எஸ்.பி பணத்தை பறித்த புறநகர் போலீசார் செல்வராஜ், ரவிக்குமார், அந்தோணிசாமியிடம் தீவிர விசாரணை நடத்தினார்.
விசாரணையில் வழிப்பறி செய்தது உண்மை என்பது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை பறித்த புதுநகர் போலீசார் செல்வராஜ், ரவிக்குமார், அந்தோணிசாமி ஆகியோர் சஸ்பெண்ட் செய்து எஸ்.பி விஜயகுமார் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
