வடிவேலு படத்தில் பஸ்சில் சீட் பிடிக்க பாம்பு போடுவதை போல், போலீஸ்காரர் ஒருவர் பஸ்சில் இடம் பிடிப்பதற்காக, தனது துப்பாக்கியை போட்டு வைத்தார். குன்னூரிலும் ஒரு சம்பவம் நடந்தது. 

தீபாவளி நெருங்கிவிட்டதால் தமிழகம் முழுவதும் பஸ், ரயில் என அனைத்து இடங்களிலும் மக்கள் வெள்ளம் அதிகரித்து காணப்படுகிறது. பஸ் நிலையம், ரயில் நிலையங்கள் மட்டுமின்றி நகை கடை, துணி கடை, பட்டாசு கடை என எங்கு பார்த்தாலும் கூட்டம் அலைமோதிக் கொண்டு நிரம்பி வழிகின்றன.

  

இந்நிலையில், குன்னூர் பஸ் நிலையத்தில் நேற்று மக்கள் கூட்டம் அதிகரித்து இருந்த்து. அப்போது, 2 போலீஸ்காரர்கள் முள்ளிகூர் என்ற இடத்திற்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தனர். அந்த நேரத்தில், எந்த பஸ் வந்து நின்றாலும் ஓடிப்போய் மக்கள் முண்டியடித்து கொண்டு ஏறிக் கொண்டே இருந்தார்கள். இதனால் அவர்களால், பஸ்சில் ஏற முடியவில்லை.

அங்கிருந்த மக்கள், பஸ் வந்து நின்றதும் கையில் உள்ள துண்டு, பைகளை ஜன்னல் வழியாக போட்டு சீட் பிடித்தனர். ஆனால் 2 போலீஸ்காரர்களிடம் கையில் துண்டும் இல்லை... பையும் இல்லை... இருவரின் கையில் இருந்ததோ வெறும் முழு நீள துப்பாக்கி மட்டுமே. பாதுகாப்பு பணிக்காக கையில் வைத்திருந்தார்கள். 

ஒரு கட்டத்தில் பொருமையை இழந்த போலீஸ்காரர்களில் ஒருவர், பஸ் வந்ததும், ஓடிச்சென்று தனது துப்பாக்கையை ஜன்னல் வழியாக போட்டார். இதை பார்த்ததும் அவர் பக்கத்தில் முண்டியடித்து கொண்டிருந்த மக்கள் அலறியடித்து ஓடினார்கள். சீட் பிடிக்க துப்பாக்கியை தூக்கி போட்டவுடன் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். போலீஸ்காரர் பஸ்சில் இடம் பிடிக்க துப்பாக்கி போட்ட போட்டோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.