திருச்சி சோமரசம்பேட்டை அடுத்த கொடாப்பு என்ற கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (51) சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக வேலை பார்த்தார். இவர் கடந்த 10-ம் தேதி இரவு ரோந்து பணியில் இருந்தா பாலகிருஷ்ணன், இரவு நேரத்தில் சோமரசம்பேட்டை காவல் நிலையம் சென்றார். அங்கு, பணியில் இருந்த சசிகலா என்ற பெண் ஏட்டுவை மாறி மாறி முத்தமிட்டார்.

அந்த நேரத்தில் உளவுப்பிரிவு போலீஸ்காரர் கேசவன் என்பவர் வந்தார். அவரிடம், சசிகலா புகார் செய்தார். அதில் எஸ்எஸ்ஐ பாலகிருஷ்ணன், முத்தம் கொடுத்ததாக கூறினார். இந்த விவகாரம் குறித்து பெண் காவலர் சசிகலா, எஸ்பி ஜியாஉல்ஹக்கிடம் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்.பி. விசாரணை நடத்தி எஸ்எஸ்ஐ பாலகிருஷ்ணனை சஸ்பென்ட் செய்தார். இதற்கிடையே பெண் போலீசும் மருத்துவ விடுப்பில் சென்றார். 

அவரது வீட்டுக்கு சென்று 2 பெண் இன்ஸ்பெக்டர்கள் நேரடி விசாரணை நடத்தி ஒரு அறிக்கை தயார் செய்து எஸ்.பியிடம் அளித்தனர். இதற்கிடையே எஸ்எஸ்ஐ பாலகிருஷ்ணன், பெண் காவலருக்கு முத்தமிடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து டிஜிபியின் கவனத்துக்கு சென்றதால் இந்த வீடியோவை வெளியிட்டது யார் என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.

இந்நிலையில் எஸ்எஸ்ஐ பாலகிருஷ்ணன் மீது வலுக்கட்டாயமாக பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மிரட்டியதாகவும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அவர் வேலை பார்த்த சோமரசம் பேட்டை காவல் நிலையத்திலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டால் தன்னை கைது செய்து விடுவார்கள் என பயந்து எஸ்எஸ்ஐ தலைமறைவானார்.

இதற்கிடையே அவர் வேறு ஒரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அந்த பெண்ணுடன் எஸ்எஸ்ஐ, கடந்த ஒரு வருடமாக தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் அந்த பெண்ணுடன் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பதுங்கி உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளிக்கவில்லை. அதே நேரத்தில் எஸ்எஸ்ஐ மீது சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு இருப்பதால், அவரை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். விரைவில் அவரை கைது செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

 

எஸ்எஸ்ஐ பாலகிருஷ்ணன், பெண்கள் விஷயத்தில் மிகவும் மோசமானவர் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் எஸ்எஸ்ஐ பாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்காததால் அவர் சேட்டை அதிகரித்துள்ளது. வசூல் சக்கரவர்த்தியாகவும் அவர் திகழ்ந்து உள்ளார். போதையில் யாராவது வந்தால் அவர்களை மறித்து வலுக்கட்டாயமாக பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபட்டுள்ளார். பணம் தர மறுத்தால் பல பிரிவுகளில் வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவார் என்றும் அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.