POLICE PROTECTIUON TO ACTOR SIMBU HOME
மெர்சலை மிஞ்சும் சிம்பு பாடல்.....சர்ச்சை வெடித்ததால் சிம்பு வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு...
சர்ச்சைக்கு பெயர் போனவர் சிம்பு என்பதில் எந்த மாற்றமும் இருக்காது.ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் எதிலாவது ஒன்றில் சிம்பு பெயர் அடிபடவில்லை என்றால் தான் ஆச்சர்யம்..
அது காதலாக இருக்கலாம், அல்லது சர்ச்சை பேச்சாக இருக்கலாம் ,திடீரென களத்தில் இறங்குவார்..பொதுமக்களுக்கு சாதகமாக பேசுவார்... சில சமயத்தில் அவர் எழுதும் பாடல் பல சர்ச்சைகளை கிளப்பும்
அந்த வகையில் தற்போது சென்னை தி.நகர் மாசிலாமணி தெருவில் உள்ள நடிகர் சிம்பு வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.
காரணம் என்ன தெரியுமா ?
பணமதிப்பிழப்பு குறித்து நடிகர் சிம்பு பாடிய பாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனால் பாஜக போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது
அந்த பாடல் வரிகள் இதோ...!
"காந்தி நோட்டு இரண்டும்...அம்பேலாகி போயாச்சி...
பேங்க் ஏடிஎம்மில் அஸ்கு புஸ்கு ஆயாச்சி...
சோக்கா சொக்கா மாட்டி....நடு தெருவுக்கு வந்தாச்சி
காத்து கிடந்த சனம்....காக்கா கூட்டம் போலாச்சி
நடுத்தரத்த நல்லா வெச்சி செஞ்சாச்சி.......சில்லறைக்கு தான் டங்குவார் அந்தாச்சி....
மலமலையா மோசம் செஞ்ச மூதேவிங்க.....பாரீனு தான் போயாச்சு..
நோகாஷ்......நோ கேஷ் கார்ட ஸ்வைப் பண்ணி நாம வாழலாம்
நோ காஷ்......நோ கேஷ்.....
ஜிஎஸ்டி-க்கு பிறகு கிளம்பிய பெரிய எதிர்ப்பை அடுத்து, பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது.தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது.
இதனை பிரதி பலிக்கும் விதமாக நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது . இதற்கு அடுத்தபடியாக தற்போது சிம்பு வந்துள்ளார்
அதாவது ஜிஎஸ்டி க்கு எதிராக, தற்போது சிம்பு வெளியிட்ட இந்த பாடல் பெரும் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக தான் தற்போது சிம்பு வீட்டில் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது
