காவல் நிலையத்தில் பெண்ணை கட்டிப் பிடித்து  முத்தம் கொடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம் !!!

விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலைய இன்ஸ்பெக்டா் ஏழுமலை உடன் பணியாற்றிய பெண் கம்ப்யூட்டர் ஆபரேட்டரை திடீரென கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்ததால் அவரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள பிரம்மதேசம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவா் ஏழுமலை. அந்த போலீஸ் ஸ்டேசனில் பெண் ஒருவர் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஏழுமலை, உடன் பணியில் இருந்த பெண் கம்ப்யூட்டர் ஆபரேட்டரை திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுகத்ததாக கூறப்படுகிறது.

ஏழுமலையின் இந்த செயலால் விரக்தியடைந்த பெண் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட டிஐஜி பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து . ஏழுமலையை கண்டித்த மாவ்த்த எஸ்.பி. ஜெயகுமார் அவரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.