பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கான பாதுகாப்பு பணியில் 5 நாட்களாக இரவு பகலாக பணியில் இருந்த காவல் ஆய்வாளர் திடீரென உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் காஞ்சி மாவட்டம், திருவிடந்தையில் நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர் சுப்பையா. கோவளம் அருகே திருவிடந்தையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். ஏப்ரல் 11 ஆம் தேதி
நடைபெறும் ராணுவ தளவாடங்கள் கண்காட்சியை மோடி துவக்கி வைக்க உள்ளார். 

கண்காட்சி நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கான பாதுகாப்பு பணியில் காவல் ஆய்வாளர் சுப்பையா ஈடுபட்டிருந்தார். இங்கு சுப்பையா கடந்த 5 நாட்களாக காவல் பணியில்
ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை சுப்பையாவுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, சுப்பையாவை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டார். ஆனால், சுப்பையா வழியிலேயே உயிரிழந்தார்.

தொடர்ந்து 5 நாட்களாக இரவு பகலாக பணியில் இருந்த காரணத்தால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.