திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போதை பாக்குகளை விறபனை செய்த 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் குட்கா பான் பொருட்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பெரும்பாலான இடங்களில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், காட்டூர் கடைவீதிகளில் போதை பாக்குகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து போலீசார் திருவெறும்பூர், காட்டூர் பகுதிகளில் உள்ள கடைவீதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அப்பகுதியில் போதை பாக்குகள் விற்பனை செய்வது தெரியவந்தது.  இதையடுத்து விற்பனை செய்த 14 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள போதை பாக்குகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.