Asianet News TamilAsianet News Tamil

வேதா இல்லம் முன்பு போலீஸ் குவிப்பு - போயஸ் கார்டனில் பரபரப்பு!!

police force in poes garden
police force in poes garden
Author
First Published Aug 18, 2017, 9:35 AM IST


ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பன்னீர்செல்வம் முதலமைச்சராகவும் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்றனர்.

ஆனால் பன்னீர்செல்வத்தை திடீரென பதவியில் இருந்து விலகும்படி சசிகலா உத்தரவிட்டதால் அவர் கட்சியை உடைத்தார்.
அவருக்கு  12 எம்எல்ஏக்கள், 12 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் மீதம் உள்ள 123 எம்எல்ஏக்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதால் முதல்வர் பதவி எடப்பாடியிடம் சென்றது.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு, துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார்.

police force in poes garden

அதிமுக டிடிவி கட்டுப்பாட்டுக்குள் சென்றதால் ஆட்சியை கைப்பற்ற விரும்பினார். இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி அமைச்சரவை டிடிவி எதிராக செயல்பட ஆரம்பித்தது.

இதைதொடர்ந்து எடப்பாடி பன்னீருடன் கூட்டணி வைக்க முடிவு செய்தார். ஆனால் பன்னீர் அணியோ நீண்ட நாட்களாக பிடிகொடுக்கவில்லை. ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வேண்டும் எனவும், ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் எனவும், சசிகலா குடும்பத்தை ஓரங்கட்ட வேண்டும் எனவும் பன்னீர் அணி கோரிக்கை விடுத்து வந்தனர். 

police force in poes garden

இதற்காக பன்னீர் தரப்பில் போராட்டமும் அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை போயஸ்கார்டனில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என அதிரடி அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார். 

மேலும், அந்த நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வழிவகை செய்யப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார். 

இந்நிலையில் ஜெயலலிதா வீட்டுக்கு உரிமை கொண்டாடி தீபா உள்ளிட்டோர் வரலாம் என்பதால் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீடு அருகே போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா வீடு அருகே வெளியாட்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் செல்ல போலீஸ் அனுமதி மறுத்து தெரிவித்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios