திருச்சி விமான நிலையத்தில் ஓ.பி.எஸ்.ஸை தாக்க வந்த சோலைராஜனை விடுவிக்க போலீஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சொந்த ஊருக்கு செல்ல சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுவதற்காக ஓபிஎஸ் வந்தார்.

அப்போது செய்தியாளர்களை தள்ளிக் கொண்டு மர்ம நபர் ஒருவர் ஓபிஎஸ்ஐ நெருங்கினார். இதனால் சந்தேகமடைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரை பிடித்து சோதனையிட்டனர்.

அதில் அவரிடம் ஒரு கத்தி இருந்ததும், ஓபிஎஸ்ஐ தாக்குவதற்காக அவர் வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த மர்ம நபரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதைதொடர்ந்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரனை நடத்தினர்.  இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திருச்சி காவல் ஆணையர் சக்தி கணேஷ், விசாரனையில் பன்னீர்செல்வத்தை கத்தியால் குத்தவந்தது அதிமுகவை சேர்ந்த சோழராஜன் என்பதும், அவர்மீது வழக்கு பதிவு செய்ய ஆலோசனை நடத்தி வருவதாகவும், தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் ஓ.பி.எஸ்.ஸை தாக்க வந்த சோலைராஜனை விடுவிக்க போலீஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. ஓ.பன்னீர்செல்வத்தை குத்துவதற்காக சோலைராஜன் கத்தியுடன் வரவில்லை என விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.