East Coast Road in Chennai in the last several crores of rupees worth of high speed traffic police in favorite luxury cars car owners are investigating Kaanatthur in East Coast Road near the traffic police were involved in the test vehicle

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகத்தில் சென்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான 9 சொகுசு கார்களை பிடித்த போக்குவரத்து போலீசார், கார் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர் அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பென்ஸ், லம்போஹினி, பி.எம்.டபிள்யூ., போன்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்கள் அணிவகுத்த படி வரிசையாக சீறிப்பாய்ந்தது.

இதை பார்த்த போலீசார் வாகனங்களை நிறுத்த முயன்றார். அப்போது போக்குவரத்து காவல் ஆய்வாளர் சவுந்திரபாண்டி என்பவற்றின் காலில் ஏற்றியபடி அனைத்து கார்களும் வேகமாகச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து உத்தண்டி சுங்கச்சாவடியில் போலீசார் கார்களை மடக்கிப் பிடித்தனர். வேகமாக சென்ற 15 கார்களில் 9 கார்கள் மட்டுமே பிடிபட்டன. 6 சொகுசு கார்கள் வேகமாகச் சென்று விட்டன.

அந்த கார் உரிமையாளர்களை அழைத்து போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இத்தகைய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.