வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரைத் அடுத்து கேளம்பாக்கம் பெண் உதவி ஆய்வாளர் உட்பட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் எஸ்.ஐ. ஆக பணிபுரிந்தவர் உஷாராணி. காவலர் புஷ்பராஜ் உட்பட காவலர்கள் சிலர் கடந்த 15-ம் தேதி இரவு வண்டலூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.  

அப்போது அவருடன்  காவலர் புஷ்பராஜ் என்பவரும் உதவிக்கு இருந்தார். இருவரும் அவ்வழியே சென்ற ஒரு வாகன ஓட்டியிடம் வேகமாக வந்ததாக கூறி அவரது வாகனங்களின் ஆவணங்களை கொண்டு வருமாறு எஸ்.ஐ. உஷாராணி கேட்டதாக தெரிகிறது. அசல் ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தை விடமுடியாது என்றும் அதற்கு பணம் தர வேண்டும் என்றும் எஸ்.ஐ. உஷாராணி கேட்டதாக தெரிகிறது. 

இதை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து இணையதளங்களில் வெளியிட்டார். மேலும் காஞ்சி எஸ்.பி.க்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினார். இதை பார்த்த எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி, உஷாராணி மற்றும் புஷ்பராஜையும் உடனடியாக காஞ்சிபுரம் ஆயுதப்படைக்கு இடம் மாற்றி உத்தரவிட்டு 2 பேரையும் சஸ்பெண்ட் செய்தனர்.