Police attacked Communist Party member Relatives and Party members Siege Police Station
தேனி
கம்யூனிஸ்டு கட்சி பிரமுகரை சரமாரியாக தாக்கிய போலீஸை கண்டித்து அவரது உறவினர்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட, "பிரேம்குமாரை விடுதலை செய்ய வேண்டும்" என்று முழக்கங்களை எழுப்பினர். இதனால் காவல் நிலையமே பரபரப்புடன் காணப்பட்டது.
இதனையடுத்து காவலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிரேம்குமாரை காவலாளர்கள் விடுவிக்க ஒப்புக் கொண்டனர். அதன்பின்னர் போராட்டத்தை கைவிட்டு பிரேம்குமாரை அவரது உறவினர்கள் அங்கிருந்து அழைத்து சென்றனர்.
