உச்சநீதிமன்ற விதித்த தடை காரணமாக தமிழகத்தில் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியாவில்லை. இதனால் கொதித்தெழுந்த இளைஞர்களும், மாணவர்களும் கடந்த 16 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை மெரினாவில் வரலாறு வியக்கும் வகையில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அறவழியில் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைக்க போலீசார் தடிய நடத்தின்ர்.ஆனாலும் 100 க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் வன்முறை வெடித்தது.

சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின்போது சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை போலீசார் சரமாரியாக தாக்கினர்.
திருவல்லிக்கேணியில் உள்ள ஐஸ்ஹவுஸ் போலீஸ் ஸ்டேசன் தீவைக்கப்பட்டது. போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.. மேலும் காவல்துறை பேருந்து, வேன் ஆகியவையும் தீயில் எரிந்து சாம்பலாகின.
கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீஸ் நடத்திய தடியடியில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர்.
தடியடியைக் கண்டித்து பல பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது கலவரக்காரர்கள் காவல் துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் 32 போலீசார் மற்றும் 2 துணை ஆணையர்கள் காயமடைந்தனர். இதனால் சென்னை மெரீனா கடற்கரை , திருவல்லிக்கேணி, ராயப் பேட்டை, மௌன்ட் ரோடு உள்ளிட்ட பகுதிகள் போர்க்களமாக காட்சி அளி்ததன.
மெரீனா கடற்கரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை காவல்துறையினர் தடியால் அடித்து நொறுக்கியுள்ளனர்.மேலும் ஆட்டோக்களுக்கு போலீசாரே தீ வைக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன.

திருவல்லிக்கேணி பகுதியில் ஒரு தெருவுக்குள் புகுந்த காவல் துறையினர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கரவாகனங்களை கண்மூடித்தனமாக தாக்கினர்.

மேலும் வீடுகளுக்குள் புகுந்து பெண்களையும் தாக்கினர். போலீசாரின் இந்த அராஜக தாக்குதல் தொடர்பாக வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ காட்சிகள் மூலம் காவல் துறையினர் வகையாக சிக்கிக் கொண்டனர் என்றே கூறவேண்டும்.
