Asianet News TamilAsianet News Tamil

தாய்மொழி அவசியம்..தமிழ்மொழியை குறிப்பிட்டு மோடி பேச்சு..டிரெண்டாகும் #tnthanksmodi

தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகளை காணொலி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில் டிவிட்டரில் #tnthanksmodi என்னும் ஹஸ்டேக் டிராண்டாகி வருகிறது.
 

PM Modi Speech
Author
Tamilnádu, First Published Jan 12, 2022, 6:25 PM IST

தமிழில் வணக்கம் என்று கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி, எல்லாருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துகளை கூறினார். மேலும் ’தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்னும் பழமொழியை கூறி தன் உரையை ஆரம்பித்தார். அவ்வப்போது பாரதியார் பொன்மொழிகள், திருக்குறள் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களில் சிலவரிகளை சுட்டிகாட்டி தனது உரையின் போது பேசுவது பிரதமர் வழக்கம். இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநில மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் தமிழில் பேசியுள்ளார்.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் நேரடியாக கலந்துக்கொள்ள தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகை தருவதாக இருந்தது. ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பு காரணமாக பிரதமர் மோடியின் பயணத்திட்டம் ரத்து செய்யப்பட்டது. பாஜக எதிர்ப்புக்குரல் அதிகமாக உள்ள தமிழகத்தில் மத்திய பாஜக தலைவர் யார் வந்தாலும் go back ஹஸ்டேக் டிரண்டாவதும், அதற்கு போட்டியாக welcome ஹஸ்டேக் உருவெடுப்பதும் வழக்கமாக நடைபெறும். ஆனால் முன்னதாக ஆளும் தரப்பு மற்றும் திமுக சார்பில் தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்போம் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார்.இந்நிலையில் காணொலி காட்சி மூலமாக பேசிய பிரதமர் மோடிக்கு  #tnthanksmodi என்னும் ஹஸ்டேக் டிராண்டாகி வருகிறது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் 11 மருத்துவ கல்லூரிகள் திறக்கபட்டவுள்ளதாக கூறினார். இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு 314 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது  597 ஆக உயர்ந்துள்ளது. ஒரு மாநிலத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் திறக்கபட்டது இதுவே முதல்முறை என்று பேசினார். முன்னால் உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 9 மருத்துவக் கல்லூரிகள் திறந்ததே சாதனையாக இருந்தது என்றும் மருத்துவ கல்லூரி திறப்பதில் என்னுடைய சாதனையை நானே முறியடித்துக்கொண்டிருக்கிறேன் என்று பெருமிதம் தெரிவித்தார்.

மருத்துவமனைகள் எவ்வளவு முக்கியம் என்பதை கொரோனா பெருந்தொற்று நமக்கு உணர்த்தியுள்ளது என்றும் மத்திய அரசின் காப்பீடு திட்டம் மூலம் மருந்துக்களுக்கான செலவுதொகை குறைந்துள்ளது எனவும் பிரதமர் பேசினார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்திற்கான மருத்துவ திட்டங்களுக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். தரமான மருத்துவம், குறைவான செலவில் சிகிச்சை எனும் இலக்கை நாம் சில ஆண்டுகளில் அடைவோம் என்று தெரிவித்தார். 

மருத்துவக்கல்லூரிகளுடன், சென்னையில் செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும் தாய்மொழிக்கல்வியை தான் நமது அரசு ஊக்குவிக்கிறது.தேசிய கல்வி கொள்கையில் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றார். தமிழ் சார்ந்த படிப்புகளில் செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios