சென்னை டூ கோவை வந்தே பாரத் ரயில் சேவை..! கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி
தமிழகத்தில் சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை-கோவை இடையே தமிழகத்திற்குள் இயங்கும் வகையில் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னையில் மோடி
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார் அவரை சென்னை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் வரவேற்றனர். இதே போல அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்றனர். இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். ரூ.1260 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து செய்தார்.
வந்தே பாரத் ரயில் சேவை
இதனையடுத்து சென்னை- கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை மோடி தொடங்கிவைத்தார். நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவிரைவு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இது முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டத்தில் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகம் வரை சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.இதனையடுத்து நாடு முழுவதும் இந்த ரயில் சேவை தொடங்கி பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே சென்னை முதல் மைசூர் வரையிலான ரயில் சேவை தொடங்கி செயல்பட்டு வருகிறது.
சென்னை டூ கோவை வந்தே பாரத் ரயில்
இதனையடுத்து சென்னை - கோவை இடையான வந்தே பாரத் ரயில் சேவை தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில் சேவை ஆகும். இந்த ரயிலானது மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளது. மற்ற ரயில்கள் சென்னையில் இருந்து கோவைக்கு 7 மணி 20 நிமிடங்கள் வரை ஆகிறது. ஆனால் வந்தே பாரத் ரயில் சேவையில் 5.50 மணி நேரத்தில் சென்னையில் இருந்து கோவையை சென்று அடைய முடியும். இதன் ரயில் காரணமாக 1 மணி நேரம் 20 நிமிரடங்கள் கால நேரம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சியில் பயணிகள்
இந்தநிலையில் சென்னை- கோயம்புத்தூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கிவைக்க சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு வந்தார். அங்கிருந்து கார் மூலமாக சென்னை சென்ட்ரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு வழி நெடுகிலும் பாஜகவினர் பூ தூவியும், கலை நிகழ்ச்சிகள் மூலமாக வரவேற்றனர். அப்போது தொண்டர்களை பார்த்து பிரதமர் மோடி கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதனையடுத்து சென்னை சென்ட்ரல் எம்.ஜி.ஆர் ரயில் நிலையத்திற்கு பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒரை பேட்டரி காரில் வந்தனர். இதனையடுத்து மோடி சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள்
சென்னை வந்தடைந்தார் மோடி..! முதலமைச்சரோடு சேர்ந்து பிரதமரை ஒன்றாக வரவேற்ற ஆளுநர் ரவி