PM Modi asked about Karunanidhi health condition

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார். கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின், கனிமொழியிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார். கருணாநிதி விரைவில் பூரணமாக குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். 

முன்னதாக திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு கடந்த 3 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவரது உடலின் சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தற்போது அவருக்கு வீட்டில் இருந்த படியே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவிரி மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது இல்லத்திற்கு கூடுதல் மருத்துவக்குழு வருகை தந்துள்ளனர். 

இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் ஜி.கே.வாசன், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் படையெடுத்து வருகின்றனர். மேலும் திமுக தலைவர் கருணாநிதியை பார்ப்பதற்காக கோபாலபுரம் இல்லத்தின் முன் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர். தொண்டர்கள் அனைவரும் கலைந்து செல்லும்படி திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து பிரதமர் மோடி தற்போது கேட்டறிந்துள்ளார். உடல்நலம் குறித்து ஸ்டாலின், கனிமொழியிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன் எனவும் பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.