கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில், இந்தியாவிலேயே முதன்முறையாக தேர்வு எழுதிய திருநங்கை தேர்ச்சி பெற்றுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் சுமார் 9 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

இந்த பிளஸ் 2 தேர்வில்  92,.1 சதவீதம் மாணவ-மாணவிகள் இதில் தேர்ச்சி பெற்றுள்ளனர், வழக்கம்போல் மாணவிகள் இந்த முறையும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 5 .2 சதவீதம் கூடுதலாக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவிலேயே முதன் முறையாக திருநங்கை ஒருவர் பிளஸ் 2 தேர்வு  எழுதி வெற்றி பெற்றுள்ளார்.

தூத்துக்குடியை சேர்ந்த தாரிகா பானு சென்னை அம்பத்தூர் காமராஜர் அரசு மேல் நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ் 2 படித்தார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் இவர் தேர்வு எழுதினார். சயின்ஸ் குரூப் எடுத்துப் படித்த இந்த திருநங்கை 537 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.