'என்னை கண்டபடி திட்டிட்டாங்க' என்று கூறி தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி


தோழியின் அம்மா திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி.ஈரோடு அருகே நடந்த துயர சம்பவம்.

Plus one school girl sucide at erode

 

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகிலிருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் - லட்சுமி தம்பதியர்.இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் கவிதா ப்ளஸ் 1ம் வகுப்பு படித்து வருகிறார். (அனைவருடைய பெயரும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) . இவரது தந்தையான ரமேஷ் ஹோட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி லட்சுமி  ஈரோடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். நேற்றிரவு சுமார் 8 மணியளவில் மார்க்கெட் வியாபாரத்துக்குச் சென்றிருந்த தாய் லட்சுமிக்கு போன் செய்துள்ளார் கவிதா.

Plus one school girl sucide at erode

அதில் பேசிய கவிதா, 'என்னுடன் படிக்கும் சங்கீதாவின் அம்மா என்னை கண்டபடி திட்டினாங்க.நான் எந்த தப்பும் செய்யல என்று கதறி அழுதிருக்கிறார்.உடனே நான் வரேன் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினார் லட்சுமி.வந்து பார்த்த பொழுதுதான் தெரிந்தது கவிதா ஏற்கனவே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த  வெள்ளித்திருப்பூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்ய தொடங்கினர். கவிதாவும்,சங்கீதாவும் தோழிகள்.சங்கீதாவின் மொபைலுக்கு சில நாட்களாகவே இளைஞர்கள் போன் செய்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

Plus one school girl sucide at erode

இந்த விஷயம் தெரிந்த சங்கீதாவின் அம்மா, 'இந்த நம்பரை யார் கொடுத்தது' என்று கேட்க, கவிதா தான் மொபைல் நம்பர் கொடுத்தால் என்று கூறி இருக்கிறார்கள். இதனால் கடுப்பான சங்கீதாவின் அம்மா  போட்டு, திட்டி தீர்த்துவிட்டார்.இதனால் மனமுடைந்த கவிதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறுகிறார்கள். கவிதா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் என்னுடைய இறப்புக்கு காரணம் தஞ்சாவூரைச் சேர்ந்த ரஞ்சித், அருண், தினேஷ் ஆகிய மூவரும்தான் என்று எழுதியுள்ளார்.கடிதத்தில் உள்ள மூன்று பேர் மற்றும் மாணவியை அவதூறாக பேசிய தோழியின் அம்மாவின் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios