Asianet News TamilAsianet News Tamil

பிளஸ்-1 மாணவி கழுத்தை நெரித்து கொடூர கொலை...துணிகள் கிழிந்து அலங்கோலமான நிலையில் கிடந்ததால் பரபரப்பு...

Plus-1 student killed in vellore lying in damaged state
Plus-1 student killed in vellore lying in damaged state
Author
First Published Apr 18, 2018, 9:10 AM IST


வேலூர்
 
வேலூரில், வீட்டின் கட்டிலின் அடியில் துணிகள் கிழிந்து அலங்கோலமான நிலையில் கழுத்து நெரிக்கப்பட்டு ரத்த காயங்களுடன் பிளஸ்-1 மாணவி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகே ஒழலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா. இவரது கணவர் தாழனூர் கிராமத்தைச் சேர்ந்த டீக்காராமன். இவர்களது மகன் நவீன்குமார் (19). மகள் சங்கீதா (16).

ராதா தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதன்பின்னர் ஆற்காடு மாசாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பழனி என்பவருடன் சேர்ந்து கே.வேளூர் அருகே உள்ள ஒழலை கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வந்தார். 

இதனிடையில் பழனி கடந்த 2013-ஆம் ஆண்டு சாலை விபத்தில் இறந்துவிட்டார். ராதாவும் உடல்நிலை சரியில்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.  இதனால் ராதாவின் அக்கா சிப்காட் அருகே அக்ராவரம் பகுதியைச் சேர்ந்த ராணி, சங்கீதாவுடன் ஒழலையில் தங்கி வசித்து வந்துள்ளார்.

சங்கீதா கே.வேளூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளஸ்-1 தேர்வு முடிந்துவிட்ட நிலையில் நவீன்குமார் தனது தங்கை சங்கீதாவை தமிழ் புத்தாண்டு அன்று தாழனூரில் உள்ள தந்தை டீக்காராமன் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

நேற்று முன்தினம் சங்கீதா கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை தேவைப்படுவதாக அண்ணன் நவீன்குமாரிடம் கூறிவிட்டு ஒழலை கிராமத்திற்கு சென்றுள்ளார். ஆனால், சங்கீதா மீண்டும் வீட்டிற்கு வர தாமதமானதால் நவீன் குமார், தங்கை சங்கீதாவுக்கு போன் செய்துள்ளார். அப்போது சங்கீதா வீட்டுக்கு வருவதாக தெரிவித் துள்ளார். நீண்ட நேரமாகியும் வராததால் மீண்டும் போன் செய்தபோது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து நேற்று காலை நவீன்குமார் ஒழலையில் உள்ள வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் கட்டிலின் அடியில் துணிகள் கிழிந்து அலங்கோலமான நிலையில் கழுத்து நெரிக்கப் பட்டு ரத்த காயங்களுடன் சங்கீதா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நவீன்குமார் இது தொடர்பாக ஆற்காடு தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலாளர்கள் சங்கீதாவின் உடலை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், இராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

கொலை செய்யப்பட்டு கிடந்த மாணவி சங்கீதாவின் கையில் பிளேடால் கிழிக்கப்பட்ட காயங்கள் இருந்தன. அருகில் அவர் அணிந்திருந்த வளையல்களும் உடைந்து கிடந்தன. உடலின் பல்வேறு இடங்களிலும் காயங்கள் இருந்தன. ரத்தம் கொட்டிய இடத்தில் எறும்புகளாக  காணப்பட்டது.

இதனை வைத்து பார்க்கும்போது அவரை யாராவது கற்பழிக்க முயன்றிருக்கலாம் என்றும் அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்து கொலையாளி தாக்கிய நேரத்தில் அதனை தடுத்தபோது வளையல்கள் உடைக்கப்பட்டிருக்கலாம் எனவும் காவலாளர்கள் கருதினர். 

மேலும், கொலை நடந்த வீடு மாடி வீடாகும். கீழ்தளத்தில் கதவு பூட்டப்பட்டு ஓலை தட்டி மறித்து வைக்கப்பட்டிருக்கும். ஆனால், நேற்று கதவு பூட்டப்படாத நிலையில் ஓலை தட்டி மட்டும் மறித்து வைக்கப்பட்டிருந்தது.

கொலை குறித்து துப்பு துலக்கி கொலையாளிகளை பிடிப்பதற்காக வேலூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர். மேலும், கதவு மற்றும் ஓலை தட்டியில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் ரேகைகளையும் தடயவியல் நிபுணர்கள் பதிவு செய்து சேகரித்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து ஆற்காடு தாலுகா காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூராய்வுக்கு பின்னர் இந்த கொலையில் வேறு மர்மங்கள் உள்ளதா? என்பது தெரியவரும். 

முதல் கட்டமாக கொலை செய்யப்பட்ட சங்கீதாவின் அண்ணன் மற்றும் குடும்பத்தினரிடம் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios