தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகேவுள்ள பாறைக்காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மகள் தம்புராட்சி (17). இவர் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் பதினோறாம் வகுப்பு படிக்கிறார்.

நேற்று மதியம் தம்புராட்டி பள்ளியின் முதல் மாடியில் இருந்து அழுதுகொண்டே கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். கீழே விழுந்த தம்புராட்டி பலத்த காயத்தோடு மீட்கப்பட்டு ஆசிரியைகளால் அருகில் உள்ள  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைப் பெற்ற பின்னர் பாளையங்கோட்டை ஐகிரௌண்ட் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

girl jumps off க்கான பட முடிவு

மாணவி பள்ளி மாடியில் இருந்து குதித்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை காவலாளார்கள் வழக்குப்பதிந்து விசாரணையைத் தொடங்கினர். அதில், "பள்ளியில் வேலை செய்யும் தற்காலிக ஆசிரியர் ஒருவர் தம்புராட்டியை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்" என்பது தெரிந்தது.

மாணவியின் தற்கொலை முயற்சி குறித்து அறிந்த மாவட்டக் கல்வி அதிகாரி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

ஆசிரியர் திட்டியதால் மாணவி பள்ளியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.