பாஜக மாநில தலைவர் தமிழிசை தூண்டுதலின் பேரில் கொலை செய்யும் நோக்கத்துடன் மிரட்டல் வருவதாகவும் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாஞ்சில் சம்பத்தின் வழக்கறிஞர்கள், காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்புக்கு பிறகு, சசிகலா மற்றும் டிடிவி தினகரனை நீக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதில், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் கடும் அதிருப்திக்கு ஆளானார்கள்.

எடப்பாடி, ஓ.பி.எஸ். பின்னணியில் பாஜக உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், மறுத்திருந்தால்.

இந்த நிலையில், நாஞ்சில் சம்பத், தமிழிசை குறித்து அவதூறாக பேசியிருந்தார். இதனால், ஆத்திரமடைந்த பாஜகாவை சேர்நத்வர்கள் இன்று நாஞ்சில் சம்பத் வீட்டில் கல் வீச்சில் ஈடுள்ளனர். மேலும், நாஞ்சில் சம்பத் சென்ற காரை பாஜகவினர் சிலர் வழிமறித்துள்ளனர். 

இதனையடுத்து, நாஞ்சில் சம்பத்தின் வழக்கறிஞர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அதில், நாஞ்சில் சம்பத்துக்க பாதுகாப்பு வழங்க கோரியுள்ளனர்.

பாஜக மாநில தலைவர் தமிழிசை தூண்டுதலின் பேரில் கொலை செய்யும் நோக்கத்துடன் தனக்கு மிரட்டல் வருவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்னர். எனவே அடையாளம் காணக்கூடிய ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியதாக கூறி, குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.