plastic meal is now a days spreading and it leads to ill

எதிலும் மாற்றும் எங்கும் மாற்றம் என்பதை நாளுக்கு நாள் நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அதற்காக உண்ணும் உணவில் கலப்படம் இருந்தாலே பல பின்விளைவுகளை நம் உடல் சந்தித்து வருகிறது. இந்நிலையில், தென்னிந்திய மக்களின் பிரதான உணவான அரிசியை போல் தற்போது பிளாஸ்டிக் அரிசி வந்துள்ளது என்பதை எத்தனை பேர் அறிவர். 

ஆந்திரா தெலிங்கானா உள்ளிட்ட சில மாநிலத்தில் தற்போது இந்த பிளாஸ்டிக் அரிசி பயன்பாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தெலுங்கானாவில் உள்ள மீர்பெட் பகுதியில் உள்ள பிரபல கடையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. 

இந்த கடையில் அடிக்கடி பொருள் வாங்க வரும் வாடிக்கையாளர், தந்த புகாரின் அடிப்படையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பாக சிவில்விநியோக துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர் 
இருந்த போதிலும், அதிகாரிகள் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர். 
மேலும் எந்த அரிசி உண்மையான அரிசி, எந்த அரசி பிளாஸ்டிக் அரிசி என கூட தரம் பார்த்து கண்டுப்பிடிக்க கூட முடியாத அளவிற்கு , போலியான பிளாஸ்டிக் அரிசி உள்ளதாக தெரிய வந்துள்ளது.
அறியாமையால் பிளாஸ்டிக் அரிசியை சமைத்து உண்ட சிலர் தற்போது வாந்தி, வயிறு வலி, கை கால் வலி என பல உபாதைகளை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தாங்கள் சமைத்த அரிசி போலியானதா என கண்டுபிடிக்க, சமைத்த உணவை உருளையாக உருட்டி கொண்டு , ஒரு டேபிள் மீது ஓங்கி அடியுங்கள் .அது சற்று விளையாட்டு பால் போன்று எகிறினால் நீங்கள் ஆணித்தரமாக நம்பலாம் அது பிளாஸ்டிக் அரிசி தான் என்று. இந்த பொய்யான உலகத்தில் , உண்மை எங்குதான் இருக்குமோ?